மாஸ்க் போடாததை கண்டித்த போலீஸ்காரரின் சட்டையை கிழித்த வாலிபர் சிறையில் அடைப்பு

சென்னை, தங்கசாலை சந்திப்பில் மாஸ்க் போடாததை கண்டித்த போலீஸ்காரரின் சட்டையை பிடித்து கிழித்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, பழைய சிறைச்சாலை ரோடு, மிண்ட் காவலர் குடியிரூப்பை சேர்ந்தவர்  தருமன், இவரின் மகன் உதயகுமார் (41). இவர் ஏழுக்கிணறு காவல் நிலையத்தில், தலைமைக் காவலர் ஆவார். ரோந்து வாகனத்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரனுடன், ஜீப் டிரைவராக இருந்தார். மிண்ட் சந்திப்பு, அங்காள பரமேஸ்வரி ஆலயம் அருகில் மாஸ்க் அணியாதவர்களிடம் வழக்கு பதிந்து அபராதம் விதிக்கும் பணியில் இருவரும் இருந்தனர்.

அப்போது பழைய வண்ணாரப்பேட்டை, நியூ பென்சனர்ஸ், நான்காவது தெருவை சேர்ந்த முகமது ரிஸ்வான் ஆலம் மகன் முகமது அப்துல்லா (27) என்பவர் மாஸ்க் அணியாமல் வந்தார்.  உதயகுமார், முகமது அப்துல்லாவிடம், வழக்கு பதிந்து அபராதம் விதித்தார். ஆனால் முகமது அப்துல்லா, வீண் தகராறு செய்து உதயகுமாரின் சட்டையை பிடித்து கிழித்தது மட்டுமல்லாமல் அடிக்கவும் பாய்ந்தார். உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஏழுக்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அப்துல்லாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may have missed