ரயிலில் ஏறி மின் கம்பியை பிடித்து விளையாட்டு காட்டிய வாலிபர் பலி உடல் முழுவதும் கருகியது!

சென்னை, காஞ்சிபுரம், வாலாஜாபாத்–ஒரகடம் பகுதியில், ரயிலில் ஏறி மின் கம்பியை பிடித்து விளையாட்டு காட்டிய வாலிபர் உடல் முழுவதும் கருகி பலியானார்.

சென்னை, காஞ்சிபுரம் , வாலாஜாபாத் ரயில் நிலையம் உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து திருமால் பூர் செல்லும் ரயில்கள் வாலாஜாபாத் வழியாக செல்லும்

ஒரகடம் பகுதியில் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

கார்கள், அதன் உதிரி பாகங்கள் ஆகியவை வாலாஜாபாத் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், சரக்கு ரயிலில், பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சரக்கு ரயில் மீது ஏறினார். இதைபார்த்த ஊழியர்கள் அவரை கீழே இறங்கும்படி கேட்டனர்.

ஆனால் அந்த வாலிபர், மின் கம்பியை பிடிப்பதாக கூறினார், ஊழியர்கள் கெஞ்சி கேட்டும் அவர் இறங்கவில்லை. பின், மின் கம்பியை பிடித்த போது வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார்.

இறந்தவர் யார் என தெரியவில்லை. அவர் யார் எந்த ஊர் என வாலாஜாபாத் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.