வேளச்சேரியில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்றது ஏன்?

சென்னை, வேளச்சேரி பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்றது ஏன் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத் (26). இவர் நேற்று இரவு வீட்டருகே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பைக்குகளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த மூன்று நாட்டு வெடிகுண்டை சரமாரியாக சரத் மீது வீசினர். அதில் இரண்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை, மூன்றாவது வெடிகுண்டு வெடித்ததில்சரத் படுகாயம் அடைந்து சரிந்தார். ஆனாலும் சரத் உயிர் பிழைக்க கூடாது என அந்த கும்பல் வெறித்தனமாக அவரை வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் தப்பிவிட்டன. இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் சரத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்ஂடுகள் கிடைத்தது எப்படி, பெண் விவகாரத்தில், சரத் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.