மணல் கடத்தும் போட்டியில் தேவக்கோட்டையில், வாலிபர் கொலை மூன்று பேருக்கு கத்தி குத்து

தேவக்கோட்டை பகுதியில், மணல் கடத்தும் போட்டியில், வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். கத்தி குத்து காயங்களுடன், மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை, தேவக்கோட்டை, செலுகை கிராமத்தை சேர்ந்தவர் பெத்து (எ) தென்னரசு (29). இவருக்கும், சிவனூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடுவதிலும், மணல் கடத்துவதிலும் இடையே போட்டியும், முன்விரோதமும் ஏற்பட்டன. இந்த நிலையில், செலுகை கடை வீதியில், தென்னரசு, மணிகண்டன் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டன. இதில், தென்னரசு, அவரின் சகோதரர் காளிதாஸ் (31), குருப்புளியை சேர்ந்த சுரேஷ்(32), இளங்குளத்தை சேர்ந்த கனேசன் (34) ஆகிய நான்கு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தென்னரசு உயிரிழந்தார். இது தொடர்பாக தேவக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.