வியாசர்பாடியில் பரபரப்பு பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி

சென்னை, வியாசர்பாடி பகுதியில், பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வியாசர்பாடி, சர்மா நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்கிக்(27). இவர், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புரோக்கராக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

நேற்று இரவு, கார்த்திக், ஹோட்டல் ஒன்றில் பரோட்டா வாங்கி வந்தார். பின், குடும்பத்துடன் பரோட்டா சாப்பிட்ட கார்த்திக், தூங்க சென்றார்.

நள்ளிரவில், கார்த்திகிற்கு திடீரென குமட்டல், மயக்கம் ஆகியவை ஏற்பட்டது.

உடல் நிலை மோசமானது. உடனடியாக அவரை அருகில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிக்கிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பாலனின்றி உயிரிழந்தார்.

புகாரின் பேரில், எம்.கே.பி நகர் போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.