திருவொற்றியூரில் ஆன் லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்ற வாலிபர் கைது

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்க முயன்ற வாலிபரை கைது செய்தனர்.

சென்னையில், மாஞ்சா நூல், காற்றாடி பறக்க விடுவதற்கு, மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது, கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்பு, கொருக்குப்பேட்டை  மேம்பாலத்தில், மாஞ்சா நூல் அறுத்து குழந்தை ஒன்று பலியானது. அதை தொடர்ந்து உயிர் பலிகள் தொடர்ந்தன. இதையடுத்து காற்றாடி பறக்க விடுபவர்கள் அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சுதகார் தலமையில், சப்-இன்ஸ்பெக்டர் காதர் மீரான், காவலர்கள் கோட்டை முத்து, நகுலன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி, விற்க முயன்ற சன்னதி தெருவை சேர்ந்த யோகேஷ் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.