அப்பாடி தூங்கிட்டாங்க, லாரி டிரைவர்களிடம் கைவரிசை 9 செல்போன்கள் பறிமுதல்

தூங்கிக் கொண்டிருக்கும் லாரி டிரைவர்களிடம் கைவரிசை காட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, புளியந்தோப்பு பகுதியில், இரவு நேரத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கன்னிகாபுரம், வாசுகி நகரை சேர்ந்த சபரி (30) என தெரிய வந்தது. அவர், செல்போன் திருடன் என தெரிய வந்தது. போலீசார் அவன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். லாரியில் டிரைவர்கள் தூங்கும் நேரத்தில் அவர்களிடம் கைவரிசை காட்டியது தெரிய வந்தது,