தி நகர் பகுதியில் மர்மமான முறையில் வாலிபர் சாவு

சென்னை, தி நகர் பகுதியில், மர்மமான முறையில் வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தியாகராயநகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). திருமணமாகாத நிலையில், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சிவசங்கர், திங்கள்கிழமை வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டில் தங்கியிருந்த ராசினி என்ற பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த பாண்டி பஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிவசங்கர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.