சாம்பிராணி தீ, புடையில் பிடித்து தூக்கத்தில் இளம்பெண் கருகினார்

சென்னை, ராயபுரம் பகுதியில், சாம்பிராணி தீ, புடவையில் தீப்பிடித்து, தூக்கத்தில் இருந்த இளம்பெண் கருகினார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, ராயப்ப்ட்டை, ஜி.எம் பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷெரீப், இவர் மெரினா கடற்கரையில், ஜூஸ் கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி சஹானா(32). நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.
கொசுவுக்காக சாம்பிராணி புகை போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிலாப்பில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணய் பாட்டில் கீழே விழுந்தது. சாம்பிராணி நெருப்பில் பாட்டு, சஹானா புடவையில் தீப்பிடித்தது.
தூக்கத்தில் இருந்த சஹானா அலறியடித்து எழுந்தார். அதில், அவரது முகம், கையில் தீப்பற்றி பலத்த காயமடைந்தார்.
அவரை காப்பாற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகார் குறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.