நடிகர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் புகுந்த பெண்ணால் பரபரப்பு; மன நலம் பாதிக்கப்பட்டவரா?

சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா என விசாரிக்கின்றனர்.

சென்னை, மதுரவாயல் , அஷ்டலட்சுமி நகரில், பிரபல நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியின் அலுவலகம் உள்ளது. இங்கு, மேனேஜராக இருப்பவர் கார்த்திக் (45) ஆவார்.

நேற்று முன் தினம் இந்த அலவலகத்துக்குள் அத்து மீறி பெண் ஒருவர் நுழைந்தார். அவர், காரில் காய வைக்கப்பட்டிருந்த மழை கோட்டை எடுத்து உடுத்தினார். அங்கேயே தூங்கினார். பின் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

 மதுரவாயல் காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் படி, போலீசார், அலுவலகத்தின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

அந்த பெண் யார் என தெரியவில்லை. மன நலம் பாதிக்கப்பட்டவரா என விசாரிக்கின்றனர்.