என்னை விட்டு, இரண்டாவதா? வீட்டுக்குள் புகுந்து பெண் வெட்டிக் கொலை; முதல் கணவர் வெறிச் செயல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், வீட்டுக்குள் புகுந்த முதல் கணவர், என்னை விட்டு இரண்டாவதா என கேட்டு, பெண்ணை சரமாரியா வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா (26), இவர் முதல் கணவர் கண்ணன் (30). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதத்தில் பிரிந்து விட்டனர். பின்னர் சங்கீதா அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்ராஜை இரண்டாம் திருமணம் செய்தார். இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், பொன்ராஜ், இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது கண்ணன், சங்கீதா வீட்டின் முகவரியை விசாரித்தார். பின்னர் வீட்டை கண்டுபிடித்து, அங்கே சென்றார். வீட்டுக்குள் புகுந்த கண்ணன் என்னை விட்டு இரண்டாவதா என ஆவேசபட்டார், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பினார். தகவல் கிடைத்து வீரகேளம்பூதூர் போலீசார் விரைந்து வந்து சங்கீதா உடலை கைப்பற்றி தப்பி சென்ற கண்ணனை தேடி வருகின்றனர்.