அம்மா, அப்பாவை விட்டு தனிக்குடித்தனமா? கணவர் கண்டிப்பு மனமுடைந்த பெண் தூக்கிட்டு சாவு

சென்னை, அயனாவரம் பகுதியில், அம்மா, அப்பாவை விட்டு தனிக்குடித்தனம் செல்வதா என கணவர் கேட்டதற்கு மனமுடைந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை, அயனாவரம், தே.எம்.பி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலா(30). இவர் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சீர்காழியை சேர்ந்த அமிர்தவல்லி (30) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவுதம் கண்ணன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் அமிர்தவல்லி, தனிக்குடித்தனம் செல்லுமாறு பாலாவிடம் கேட்டு வந்தார். அம்மா, அப்பாவை விட்டு நாம் தனிக்குடித்தனம் செல்ல முடியாது என பாலா கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அமிர்தவல்லி வேலைக்கு சென்ற பாலாவிற்கு, செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி அதில் நான் உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் இனி யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன் என கூறி தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.