தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கியுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

டாக்டர் படம் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து வரும் மார்ச் 26ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் டாக்டர் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ரசிகர்களையும் அதிருப்தி அடையச் செய்யாமல் படத்தை முடிந்த வரை விரைவாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.