ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்திலிருந்து ரிலையன்ஸ் விலகக் காரணம் தெரியுமா?

உலகளவில் 2வது மிகப்பெரிய லீக்போட்டியான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென ஏலத்திலிருந்து விலகியது. இதையடுத்து, அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி ஸ்டார் நிறுவன் 300 கோடி டாலருக்கு ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கைப்பற்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், அமேசானின் ஜெப் பிஜோஸும் போட்டியிடுகிறார்கள் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது.

ஆனால், திடீரென அமேசான் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை போட்டியிலிரிருந்துவிலகிக்கொள்வதாக அறிவித்தன.

அமெரிக்க ஊடக நிறுவனமான பாராமவுண்ட் குளோபல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்துதான் டிஜிட்டல் உரிமையையும் கைப்பற்ற நினைத்தன.

டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றினால், அடுத்த 5 ஆண்டுகளில் விளம்பர வருவாய் 4 மடங்கு அதிகரிக்கும் எனத் திட்டமிட்டன.

ஆனால், தொலைக்காட்சி உரிமையை வென்றால், அதனால் கிடைக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்பதால் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், வயாகாம்18மீடியா, அம்பானி-பாராமவுண்ட் ஆகியவை முதலில் தொலைக்காட்சி உரிமத்துக்குதான் போட்டியிட்டாலும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை மீது இந்த நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக வயாகான்18 நிறுவனம் 3100 கோடி டாலருக்கு ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை வென்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியிலிருந்து விலகியது.

ரிலையன்ஸின் ஜியோ தளத்திலும் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதை வேறுவிதமாக பயன்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணியது.

அதாவது ஜியோதளத்தில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களையும், இ-வர்த்தகத்தையும் மேம்படுத்த எண்ணியது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஏலத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் விலகியதால், கோடிக்கணக்கான டாலர்கள் மிச்சப்பட்டது.

இந்த டாலர்கள் அனைத்தையும், அடுத்த மாதம் நடக்கும் 5ஜி ஏலத்துக்கு திருப்பவும்ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம், 5ஜிஅலைக்கற்றை ஏலத்தில் வெற்றிகரமாக முடித்தால், அடுத்துவரும் ஐபிஎல் போட்டித் தொடர்களை பார்க்க வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்ஒர்க்கவே தேர்வு செய்வார்கள்.

அப்போது ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஸ்மார்ட்போனில் ஐபிஎல் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, டேட்டா கட்டணம், டேட்டா விற்பனை அதிகரிக்கும்.

இதன் மூலம் ஜியோ நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் ரிலையன்ஸ் விலகவில்லை. அதைவிட பெரிய ஆதாயம் கிடைக்கும் பிரிவை பார்த்தவுடன் ஏலத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது அவ்வளவுதான்.

இதனால்தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆண்டுதோறும் லாபத்தை கொழிக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 90 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேட்டா இல்லாமல் இன்டர்நெட் இல்லை, ஆதாலல், இன்டர்நெட்டுக்கு மூலமான டேட்டா, ஸ்பெக்ட்ராம் தேவை என்பதால், அம்பானி 5ஜி ஏலத்தில் கவனம் செலுத்துகிறார்.