போதை மாத்திரை விற்க முயற்சித்த போது, வாங்க வந்த வாலிபர் கைது

சென்னை, சிந்தாதரிப்பேட்டை வலி நிவாரணி நைட்ரவெட் போதை மாத்திரை விற்க முயற்சித்த போது வாலிபர் சிக்கினார், அதை வாங்க வந்தவரும் கைது செய்யப்பட்டார்.

சென்னை, திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலை, பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் அல்ஜமீர் (27). இவர், நேற்று துணை மேயர் கபால மூர்த்தி சாலை, மே தின பூங்கா அருகில், போதை மாத்திரையுடன் நின்றிருந்தார்.

அதை வாங்குவதற்கு, திருவல்லிக்கேணி, பெரிய தெரு, கானாபாக் தெருவை சேர்ந்த அஜித்(20) அங்கு வந்தார்.

அப்போது, அங்கு, சிந்தாதரிப்பேட்டை போலீசார் வந்தபோது, இருவரும் தப்பிக்க முயற்சித்தனர். போலீசார், அல்ஜமீர், அஜித் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, வலி நிவாரணி 300 நைட்ரவெட் போதை மாத்திரை மற்றும் 20 ஆயிரம் ரூபாய், மொபைல்போன்கள் மூன்று ஆகியவை பறிமுதல் செய்தனர்.