மின் மோட்டாரை போட்டபோது, ஸ்விட்சில் மின்சாரம் பாய்ந்து, ஓய்வு துறைமுக ஊழியர் பலி

மின் மோட்டாரை போட்டபோது, ஸ்விட்சில் மின்சாரம் பாய்ந்து ஓய்வு துறைமுக ஊழியர் பலியானார்.
 
சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனி, 6வது தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (80). இவர் சென்னை துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் துரைராஜ், இன்று மாலை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்கு ஸ்விட்சை அழுத்தினார்.

அப்போது அதில் ஏற்பட்டிருந்த மின்கசிவின் காரணமாக, துரைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்தக் காயமடைந்த துரைராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், துரைராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.