மேற்கு வங்க சிறுவன் கொலை; திருட்டை தடுத்ததால் கொன்றோம்; கைதான இருவர் வாக்குமூலம்..!

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் மேற்கு வங்க சிறுவன் கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். மொபைல்போன் திருட்டை தடுத்ததால் கொலை செய்தோம் என அவர்கள் வாக்கு மூலம் தந்தனர்.

சென்னை, தண்டையார் பேட்டை, பழைய வைத்திய நாதன் தெருவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுர்பதி சர்தார்(17) என்பவர், தன் நண்பர்களுடன் தங்கியிருந்து, கட்டட வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சுர்பதி சர்தார் மட்டும், வீட்டில் இருந்தார்.

இரவு நேரத்தில், அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அங்கு, சுர்பதி சர்தார் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

புகாரின் பேரில்,  தண்டையார் பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இருவர், தங்களின் முகத்தை மூடியபடி நடந்து சென்றனர்.

போலீசார் சந்தேகமடைந்து, அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபு (27) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.

சம்பவத்தன்று, இவர்கள், சுர்பதி சர்தார் வீட்டுக்குள் நுழைத்து, மொபைல்போனை திருடினர்.

சத்தம் கேட்டு அவர் எழுந்து, இவர்களை பார்த்து கத்தி கூச்சலிட்டதால், கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. கைதான இருவர் மீதும், ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன.