வீட்டின் அருகே விளையாடிய போது காய்கறி வேன் மோதியது,ஒன்றரை வயது சிறுமி பலி

விருதுநகர் மாவட்டம், உப்பு ஓடை பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமி காய்கறி வேன் மோதியதில் பலியானார்.

விருதுநகர் மாவட்டம்,  உப்பு ஓடை, கிழக்கு தெருவில் வசித்து வருபவர் சொக்கலிங்கம். இவரின் ஒன்றரை வயது குழந்தை சரண்யா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது காய்கறி ஏற்றி வந்த வேன், சரண்யா மீது மோதியது. பலத்த காயமடைந்த குழந்தை சரண்யாவை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற வேன் டிரைவர் சசிக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். வேன் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.