நெல்லை அருகே பரிதாபம், வேன்- பைக் பயங்கர மோதல்; தீப்பிடித்ததில் தந்தை-மகள் பலி

திருநெல்வேலி அருகே வேன்-பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து தந்தை-மகள் பரிதாபமாக பலியாகினர்.

திருநெல்வேலி, மூலக்கரை பட்டியை சேர்ந்தவர் கணேசன் (45). இவர் தன் மகளுடன் பைக்கில் நேற்று இரவு சென்றரர். சுமார் 12 மணியளவில், தூத்துக்குடியில் இருந்து நான்கு வழிச்சாலை தெய்வ செயல்புரம் பகுதியில், காற்றாலை அமைக்கும் பணிக்கு ஆட்களை இறக்கிவிட்டு வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது கணேசன் பைக், வேன்  நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதில் வேன், பைக் தீப்பிடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து முரப்ப நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.