மத்திய விஸ்டா திட்டம் பற்றி கட்டுக் கதைகள் : விளக்கம் அளித்த மத்திய அமைச்சர்

மத்திய விஸ்டா திட்டம் குறித்து கட்டுக் கதைகள் பரப்படுகிறது என்றும் தற்போது நடைபெற்று வரும் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் விளக்கம் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில் மத்திய விஸ்டா திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்த திட்டம் குறித்து தவறான கதைகள் பரப்பப்படுவதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறுகையில், வரலாற்று மற்றும் கலாச்சார கட்டிடங்கள் எதுவும் தொடப்படாது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் மத்திய விஸ்டா அவென்யூ ஆகிய 2 புதிய திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த திட்டங்கள் குறித்து தொற்று நோய்க்கு முன்னர் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.1,300 கோடியாகும் என்று தெரிவித்தார்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது எனக் கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பொதுநல நோக்கத்துடன் மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.