2 ஆண்டுகளுக்கு வேலை வாங்கிக்கங்க: உதவிப் பேராசிரியர் பணிக்கு டாக்டர் பட்டம் தேவையில்லை யுஜிசி அறிவிப்பு..!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை. முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023ம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.


பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோர் கண்டிப்பாக பிஹெச்டி (டாக்டர்பட்டம்)பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கல்வியில் தரத்தை உயர்்த்த வேண்டும், கற்பத்தலில் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த விதிமுறையில் யுஜிசி திருத்தம் கொண்டு வந்தது. இது இந்த ஆண்டு முத்ல அமலுக்கு வருவதாகவும் 2021-22 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.


இந்நிலையில் கடந்த மாதம் 4-ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் அளித்த பேட்டியில், “கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவதற்கு முனைவர்பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமில்லை.

அந்த விதிமுறை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டால்தான், மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் பேராசிரியர் இடங்களை நிரப்ப முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, உதவிப் பேராசிரியர்களாக பணிக்கு வருவோர் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முனைவர் பட்டம் இல்லாமல் சேரலாம். முதுநிலைப் பட்டமும், யுஜிசியின் நெட் தேர்வு அல்லது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள்.


தற்போதைய நிலையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு வர முடியும் என்ற விதி நடைமுறைப்படுத்தினால், அதற்கு நீண்டகாலம் ஆகலாம்.

இதனால் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படும் நோக்கில் இந்த திருத்தத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு தள்ளிவைத்தது. இந்த திருத்தம் தள்ளிவைக்கப்பட்டதால், மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

You may have missed