கொரோனா வார்டில் முதல்வர் ஆய்வு.. எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது.. உதயநிதி பாராட்டு

உதயநிதி ஸ்டாலின்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா வார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது என்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு,திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார். முதல்வரின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் பாராட்டியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஆய்வு

உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிபிஇ உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத் துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந் தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்று பதிவு செய்துள்ளார்.