ஊரடங்கில் வருமானம் இல்லாமல் வேலைக்கு சென்ற வாலிபர் சாவு தலையில் மரம் விழுந்த கொடூரம்

சென்னை, மாதவரத்தில், ஊரடங்கில் வருமானம் இல்லாமல் வேலைக்கு சென்ற வாலிபர் தலையில் மரம் விழுந்த பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூர், பாலக்கிருஷ்ணன் நகரில் வசிப்பவர் அசோக்குமார். இவர் மாதவரம், ரிங் சாலையில், தேக்கு மர குடோன் உள்ளது. இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை, ரங்கநாதபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் தமிழ் செல்வன் (22) என்பவர் இன்று காலை இந்த குடோனுக்கு வேலைக்கு சென்றார். ஊரடங்கில் வருமானம் இன்றி தவித்த தமிழ் செல்வன் மரம் தூக்கியாவது சம்பாதிக்கலாம் என சென்றார். ஆனால் அவர் வேலை பார்க்கும் போது மரம் அவர் தலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.