சைதாப்பேட்டையில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொன்ற கொடூரம் கானா பாட்டு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்

சென்னை, சைதாப்பேட்டையில், கானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சைதாபேட்டை, செட்டித்தோட்டம், ஆலந்தூர் ரோட்டை சேர்ந்தவர் உமர் பாஷா(19). இவர் அந்த பகுதியில், லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், செட்டித்தோட்டம் பகுதியில், கடந்த 24ம்‌ தேதி அன்று, அதே இடத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் இறந்து விட்டார். அங்கு கானா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில், உமர் பாஷா, தினேஷ், அருண், சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர். அனைவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது கானா பாட்டுப்படுவதில் உமர்பாஷாவிற்கும், அவர்களுக்கும் இடையில் பயங்கர தகராறு ஏற்பட்டது.

அதில், உமர்பாஷாவை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். அங்கிருந்தவர்கள் உமர்பாஷாவை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

சைதாபேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தப்பிசென்ற நபர்களை தேடி வருகின்றனர்.