வீட்டுக்குள் புகுந்து துணிகரம்: துணை நடிகையிடம், கத்தி முனையில் நகை பறித்த மர்ம நபர்கள்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து துணை நடிகையிடம், கத்தி முனையில், நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் நகர், முதல் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருபவர் சின்னதம்பி மகள் விஜயலட்சுமி (35). இவர், சினிமாவில், துணை நடிகையாக உள்ளார்.

நேற்று இரவு, இவரின் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் இரண்டு பேர் புகுந்தனர். அப்போது, விஜயலட்சுமி நீங்கள் யார் என கேட்டபோது, கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர், அவரின் ஆடையை களையச்சொல்லி, அதை வீடியோ எடுத்தனர். போலீசில் சொன்னால், வீடியோவை வைரலாக்குவோம் என மிரட்டினர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். விஜயலட்சுமி இது குறித்து, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.