வீடுகளின் பூட்டை திருடும், மூன்று பேர் கும்பல் கைது

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து   திருடும் மூன்று பேர் கும்பல் கைதாகினர்.

 சென்னை, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை,  ராமசாமி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 23ம் தேதி அன்று, வீட்டை பூட்டிவிட்டு,  குடும்பத்துடன் திரைப்படம் படம் பார்க்க சென்றார்.

இதை நோட்டமிட்ட ஒரு கும்பல், சக்திவேல் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ1.45 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பியது. இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணையில், இத் திருட்டில் ஈடுபட்டது ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, அப்புனு (எ) சரத், சண்முகராஜ் ஆகிய 3 பேரும்தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதே கும்பல் ஏற்கனவே கடந்த 21ம்  தேதி எம்.ஜி.ஆர் நகர் பெரியார் தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.