மாடியில் பந்து விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி: சிசிடிவியில் பதிவான பரிதாப காட்சி

திருவாரூரில், மாடியில் பந்து விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து, சிறுவன் பலியானான். இந்த பரிதாப காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நேதாஜி நகரில் மாடியில் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொருவன் தாவிப் பிடிக்க முற்பட்டான்
அந்த நேரத்தில் சிறுவனின் கை, மாடியை ஒட்டி உரசியவாறு செல்லும் மின் கம்பியில் பட்டு விட்டன.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் மாடியிலிருந்து துடிதுடித்து இறந்து விழுந்தான். மாடியிலிருந்து சிறுவன் விழும் காட்சி மாடிக்கு கீழிருக்கும் கடையில் உள்ள சிசிடிவியல் பதிவாகியுள்ளது
சிறுவன் விழுந்தவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று அவனை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து விட்டான். சிறுவன் குறித்து விசாரணை நடந்து வருகிறது.