கடையை திறக்கும்போது அதிர்ச்சி; பழ வியாபாரி அலறியடித்து ஓட்டம்..! படம் எடுத்து ஆடிய நல்லபாம்பு:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், கடையை திறக்கும்போது, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால், பழ வியாபாரி ஓட்டம் பிடித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நந்த ஆற்றங்கரை காசி நாதபுரம் சந்திப்பில், நவீன் குமார் என்பவர் பழக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று வழக்கம் போல் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

பின்னர், இன்று காலை கடையை திறந்தார். நெளிந்தபடி ஒன்று நின்றிருந்ததாம் கண்ணை கசக்கி பார்த்ததில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியதாம். ஆத்தாடி என அலறிய நவீன் குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதை பர்த்த மற்ற கடைக்காரர்களும் அலறினர், தகவல் கிடைத்து, திருத்தணி தீயணைப்பு படைவீரர்கள் வந்தனர். அவர்களிடத்திலும், படம் எடுத்து ஆடியது. பின்னர், லாவகமாக அந்த பாம்பை பிடித்தனர். இதனால், காசி நாதபுரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டன.