திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ஆற்று ஓடையில் பிணம் வீச்சு

திருத்தணி, தாடூர் பகுதியில், திருமணமான மூன்று மாதத்தில்  புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்டார். ஆற்று ஓடை பகுதியில் அவரின் பிணம் வீசப்பட்டிருந்தது.

 திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாடூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ். இவர், விவசாயி இவரின் மகன் ராசுக்குட்டி (25). இவர், நூர் ராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் நடத்தினர்.

உறவு முறையில், இருவரும் அண்ணன், தங்கை ஆவர். இதனால், அவர்களை பிரித்து வைத்தனர். ஆனால், கீர்த்தனாவுடன் சேர்ந்து வாழ, ராசுக்குட்டி துடித்தார்.


கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராசுக்குட்டி காணாமல் போனார். இது தொடர்பாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், திருத்தணி சித்தூர் சாலையில் ராசுக்குட்டி உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

போலீசார், ராசுக்குட்டியை விரைந்து கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, ஊத்துக்கோட்டை ஆற்றங்கரை ஓடை அருகில் ராசுக்குட்டி பிணமாக கிடந்தார்.

அவரை வெட்டிக்கொன்று பிணத்தை வீசியிருந்தனர். போலீசார், ராசுக்குட்டியின் உடலை கைப்பற்றி கீர்த்தனாவின் தந்தை நூர் ராஜ், பைரவன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.