வீட்டுக்குள் அரசு செவிலியர் கொலை..! அடித்துக்கொன்றது யார் என விசாரணை:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், வீட்டுக்குள் அரசு செவிலியர் கொலை செய்யபட்டார். அவரை அடித்து கொன்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, பாப்பாம்மாள் புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல்லில் தங்கியிருந்து கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி செல்வி (38). இவர், ஆண்டிப்பட்டியில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவர், பாப்பாம்மாள் புரத்தில் வீடு எடுத்து, தனியாக தங்கியிருந்தார். சுரேஷ் வழக்கம் போல் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால், அவர் அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர், உறவினருக்கு சுரேஷ் தகவல் சொல்ல அவர்கள் சென்று பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு பூஜை அறையில் தலை, முகம் காயங்களுடன் செல்வி இறந்து கிடந்தார். அவர், கொலை செய்யப்பட்டார் என தெரிந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார், செல்வியின் உடலை கைப்பற்றி, அவரை கொன்றது யார்? நகைக்காக நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.