அம்மன் கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலி திருட்டு; போலீசில் சிக்கிய வாலிபர்..!

சென்னை, வியாசர்பாடி பகுதியில் அம்மன் கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலி திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார்.

 சென்னை, வியாசர்பாடி, எஸ்.ஏ காலனியை சேர்ந்தவர்  ராஜம்மாள்(38). இவர், அங்கு, அங்காள பரமேஸ்வரி கோவிலை நிர்வகித்து வருகிறார்.

நேற்று முன் தினம் காலை, கோவிலுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்து இருந்தது. அம்மன் கழுத்தில் கிடந்த,10 சவரன் தாலி திருடுப்போயிருந்தது.

இது குறித்து, எம்.கே.பி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

நேற்று, போலீசார் ரோந்துப்பணியில் இருந்தபோது,  சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சிக்கினார்.

அவரது கையில், 10 சவரன் தாலி இருந்தது. விசாரணையில், அம்மன் கழுத்தில் இருந்து திருடியது தெரியவந்தது.

அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கம்பர் நகர், கங்கை நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ) விக்கி(23) என தெரிந்தது.