சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி கூட்டு பலாத்காரம், தூக்க மாத்திரை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பாலியல் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, விருகம்பாக்கம்,  தசரதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். இதை தெரிந்துக் கொண்ட அடையாறு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த ஒரு நபரும், அவரது நண்பர்களும் அந்த பெண்ணை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அந்த நபரும், அவரது நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் அந்த பெண், அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். இதில் அந்த பெண் எழுதிய தற்கொலை கடிதத்தில், அந்த நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.