ஏறியவேகத்தில் இறங்கிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு 240 ரூபாய் நிலையில் இன்று ஏறக்குறைய அதே அளவு குறைந்து 43 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,380ஆகவும், சவரன், ரூ.43,040ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து ரூ.5,345ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 760 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,345க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலையற்றதாக நாளுக்கு நாள் உயர்ந்து நடுத்தர மக்களையும், நகைப்பிரியர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது.
இதில் உச்சகட்டமாக தங்கம் விலை நேற்று சவரண் ரூ.43 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்து.
மூகூர்த்த நாட்கள் என்பதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்தது. ஆனால், ஏறிய வேகத்தில் இன்று தங்கம் விலை இறங்கியது.
தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை அடுத்துவரும் நாட்கள் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.75 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.74.60ஆகவும், கிலோவுக்கு 400 குறைந்து ரூ.74,600 ஆகவும் சரிந்துள்ளது.