ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை 2 நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் நகைவாங்குவோர் பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,355ஆகவும், சவரன், ரூ.42,840ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.5,345ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ. 42 ஆயிரத்து 760 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,345க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை நிலையற்றதாக நாளுக்கு நாள் மிகப்பெரிய ஏற்ற இறக்கத்துடன் நகர்வது நகைப்பிரியர்களையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் சுற்றலில் விடுகிறது.

தங்கம் விலை நேற்று சவரணுக்கு 230ரூபாய் வரை உயர்ந்தநிலையில் இன்று திடீரென 80ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தங்கம் விலையில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரமாக உள்ளது