வீரலட்சுமிக்கு ஆபாச படம், கேரளாவில் வாலிபர் கைதானார்

தமிழக முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை கேரளாவில் வைத்து கைது செய்தனர்.

தமிழக முன்னேற்றப்படை அமைப்பின் தலைவராக இருப்பவர் வீரலட்சுமி. இவரின் வாட்சப் மெசஞ்சருக்கு தொடர்ந்து ஆபாச விடியோக்கள் வந்தன. இது குறித்து வீரலட்சுமி சென்னை போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து வீரலட்சுமி, அரிவாளுடன் வீடியோவில் காட்சி அளித்து தனக்கு ஆபாச விடியோ அனுப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அரபு நாடுகளில்  போன்று அறுத்துடுவேன் என கதறினார்.

இது காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் ஆணையர் சங்கர் ஜிவால், நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள கீழ நெடுவாயல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (34) என்பவரை கைது செய்தனர். இவர் கேரளா, மலப்புரத்தில் வேலை பார்த்து வருகிறார். கைதான ஆரோக்கியசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.