மாயமான திமுக பிரமுகர் கொலை; துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டினர்..!

சென்னை, மணலி பகுதியில் மாயமான திமுக பிரமுகர் கொல்லப்பட்டார். சாக்கு மூட்டையில், துண்டு, துண்டாக கிடந்த உடலை கைப்பற்றி கள்ளக்காதலி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அடையாறு ஆற்றில் வீசப்பட்ட தலையை தேடி வருகின்றனர்.

சென்னை, மணலி, செல்வ விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராவ். இவரின் மகன் சக்கரபாணி (65). இவர், திமுக கட்சியின் 7வது வார்டு பகுதி பிரதி நிதி.

இவர், கடந்த 10ம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் அவரை தேடி வந்தனர். சக்கரபாணியின் அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், நேற்று  மட்டும் இயக்கத்தில் இருந்தது. அதன் டவரை வைத்து போலீசார் தேடியபோது, ராயபுரம் பகுதியை காட்டியது.

இதையடுத்து, ராயபுரம், கிரேஸ் கார்டன், 3வது தெருவில் வசிக்கும் அஸ்லாம் உஜைனி மனைவி தமீம் பானு (35) என்பவரின் வீட்டில், சக்கரபாணியின் செல்போன் டவர் காட்டியதால், அங்கு தனிப்படையினர் விரைந்தனர்.

அங்கு, போலீசார் சென்றபோது, வீட்டுக்குள், தமீம் பானு, அதே பகுதியை சேர்ந்த மைத்துனன் வசிம்பாஷா (35), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (29) ஆகியோர் இருந்தனர். வீடு முழுவதும் சோதனையிட்டபோது, ரத்தக்கறையுடன், சாக்கு மூட்டை கிடந்தது.

போலீசார், சாக்கு மூட்டையை பிரித்தபோது, அதில், சக்கரபாணியின் உடல் பல துண்டுகளாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடலை கைப்பற்றி, பின்னர் தமீம் பானு உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், மணலியில் இருந்தபோது, தமீம் பானுவுக்கும், சக்கரபாணியிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்தது. பின்னர், அது கள்ளக்காதலாக மாறியது. ராயபுரம் வந்தபிறகும், தமீம்பானு, சக்கரபாணியின் உறவு நீடித்தது.

கொலையானவர் (சக்கரபாணி (65)

கடந்த 10ம் தேதி, ராயபுரம் வீட்டிற்கு வந்த சக்கரபானி, தமீம் பானுவுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து, வசிம்பாஷா ஆத்திரமடைந்து, அவரை கொன்றார்.

பின்னர் என்ன செய்வது என தெரியாமல், தமீம் பானு, டில்லிபாபு ஆகியோர் உதவியுடன், சக்கரபாணியின் உடலை துண்டாக்கி வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினர்.

டில்லிபாபு ஆட்டோ மூலம், சக்கரபாணியின் தலையை மட்டும், அடையாற்றில் தூக்கி வீடியதாக தெரிவித்தனர். பின்னர், துண்டாக்கிய உடலை அதே ஆற்றில் வீசுவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

செல்போன் டவர் காட்டிக்கொடுத்ததால் தமீம்பானு, வசிம் பாஷா டில்லிபாபு ஆகியோர் சிக்கினர். அடையாறு ஆற்றில் தலை வீசப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.