உணவு ஆர்டர் கொடுத்து கைவரிசை, ஊழியரிடம் பைக், பணம் பறிப்பு; கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

சென்னை, எம்.கே.பி நகர் பகுதியில், உணவு ஆர்டர் கொடுத்து ஊழியரிடம் பைக், பணத்தை பறித்து கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், எட்டாவது பிளாக், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முருகன், இவரின் மகன் சிவப்பிரகாசம் (20). இவர் குயிக் புட் டெலிவிரி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வியாசர்பாடி, கென்னடி நகர் எபி (20), எம்.கே.பி.நகர், சர்மா நகர், பி பிளாக்கை சேர்ந்த மேகநாதன் மகன் சக்திவேல் (20) ஆகியோர் குயிக் டெலிவிரி புட்டில், சிக்கன் ரைஸ், பாப்கார்ன் ஆகியோர் ஆர்டர் செய்தனர். சிவப்பிரகாசம் அந்த உணவை டெலிவிரி செய்ய வியாசர்பாடி, ஜெ.ஜெ.நகர், 7வது தெருவுக்கு வந்தார். அப்போது எபி, சக்திவேல் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ஆர்டர் செய்த உணவை வாங்கியது மட்டுமல்லாமல் சிவப்பிரகாசத்திடம், பைக், செல்போன், 6 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். புகாரின் பேரில், எம்.கே.பி நகர் சப்-இன்ஸ்பெக்டர்  கன்னியப்பன் தலைமையிலான தனிப்படையினர், சக்திவேலை கைது செய்து பைக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள எபியை தேடி வருகின்றனர்.

You may have missed