காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்தியவர் கைது

காபி கடை என்ற பெயரில், ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் காபி ரெஸ்டாரண்ட் என்ற கடை உள்ளது.

இந்த கடையில் அளவுக்கதிக்காக வாலிபர்கள் கூட்டம் அதிகமாக வந்து சென்றது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில், தேனாம்பேட்டை போலீசார், காபி கடையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து போலீசார் காபி கடைக்குள் சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு அறையில் ஹூக்கா பார் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

காபி கடை நடத்தி வந்த முகேஷ்(32) என்பவரை கைது செய்தனர். பின், அங்கிருந்து குழாய் பைப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.