நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் பிச்சை எடுக்கும் போராட்டம்; வழக்குகளை நேரடியாக நடத்த கோரிக்கை..!

விழுப்புரம் மாவட்டம், நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் ஒருவர்  பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார். வழக்குகளை நேரடியாக நடத்த கோரிக்கை வைத்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நீதிமன்றங்களில், வழக்குகளை நேரடியாக நடத்தாமல், ஆன் லைனில் மூலம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதை பரிசீலனை செய்யக்கோரி, விழுப்புரம் நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் பிச்சை எடுக்கும் போராட்டட்தில் ஈடுபட்டார்.

சமூக இடைவெளியோடு வழக்குகளை நேரடியாக  நடத்த அனுமதிக்க வேண்டும், வழக்கறிஞர் தொழிலை கவுரமாக நடத்த வேண்டும் என்பதற்காக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதாக அவர் தெரிவித்தார். போலீசார், அவரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, அவரின் போராட்டட்தை கலைத்தனர்.