சினிமா போல் சம்பவம்; கத்தியை சுழட்டி மாமூல் வசூல்; போலீசாரிடம் சிக்கிய ரவுடி..!

சென்னை, ராயபுரம் பகுதியில் சினிமா போல், கத்திய சுழட்டி மாமூல் வசூலித்த ரவுடியை கைது செய்தனர்.

சென்னை, ராயபுரம், ஏ.ஜெ காலனி பிரதான சாலையில், இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர், கத்தியை சுழட்டியபடி, பொதுமக்களை அச்சுறுத்தி கடைகளில் மாமூல் வசூலித்தார்.

இது குறித்து ராயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி தப்பிக்க பார்த்தார். போலீசார் நான்கு பக்கமாக சென்று, அவரை பிடித்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், ராயபுரம், ஏ.ஜெ.காலனியை சேர்ந்த ரூபேஷ்(26) என தெரிந்தது. இவர் மீது கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.