ரூ.40 லட்சம் கடன் வாங்கிய அண்ணன், தம்பியை கடத்திய கும்பல் கைது

சென்னை, மண்ணடி பகுதியில் ரூ.40 லட்சம் கடன் வாங்கிய அண்ணை மிரட்ட, அவரின் தம்பியை கடத்தி சென்ற, நான்கு பேர் கும்பல் கைது செய்தனர்.

ராம நாதபுரம், பாசிப்பட்டினம், தர்கா தெருவை சேர்ந்தவர் கலீலூர் ரகுமான். இவர்களின் மகன்கள் நூர் ஹக்(26), ஷேக் மீரான்(22) ஆவர். ஷேக் மீரான்.

நேற்று முன் தினம் மாலை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் உணவருந்த சென்றார். அப்போது, அவரை ஒரு கும்பல் பைக்கில் கடத்தி சென்றது.

இது குறித்து, கலீலூர் ரகுமானுக்கு போன் மூலம், அந்த கும்பல் பேசியது. அதில், நூர் ஹக் வாங்கிய கடன் ரூ.40 லட்சம் உடனடியாக வர வேண்டும் என மிரட்டியது.

உடனடியாக கலீலூர் ரகுமான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடத்தல் குறித்து மொபைல்போன் மூலம் தகவல் தந்தார்.

இதையடுத்து, வடக்கு கடற்கரை போலீசார் , உடனடியாக விசாரனையில் இறங்கி, மொபைல்போன் டவரை வைத்து முத்து மாரி செட்டி தெருவுக்கு சென்று, அங்கு அடைத்து வைத்திருந்த
ஷேக் மீரானை மீட்டனர்.

பின்னர், ஷேக்மீரானை கடத்திய மண்ணடி, முத்துமாரி செட்டி தெருவை சேர்ந்த சாலிபு மகன் முகமது ராவுத்தர்(45), அப்துல் வகாப் மகன் முகமது ரிபாயிதீன் (25), புதுக்கோட்டை, ஆவுடையார் கோயிலை சேர்ந்த கருப்பையா மகன் விஜயன் (29), பாண்டி மகன் லட்சுமணன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

அண்ணனை வாங்கிய கடனை வாங்க தம்பியை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.