மதுப்போதையில் வந்த மயக்கம், மகனின் பள்ளி வாட்சப் குருப்பில் ஆபாச படம் அனுப்பி தந்தை கைது

சென்னை, ஆவடி பகுதியில், மதுப்போதையில் மகனின் பள்ளி வாட்சப் குருப்பில் ஆபாச படம் அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மாநகராட்சி உயர் நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கென வாட்சப் குருப் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பள்ளியில்,  ஆவடி, அண்ணாமலை நகரை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் படித்து வருகிறான். இந்த நிலையில் அந்த மாணவனின் வாட்சப் எண்ணில் இருந்து பள்ளி குருப்பிற்கு ஆபாச படம் ஒன்று வெளியானது. இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தலைமை ஆசிரியர் ஜெகனுக்கு தெரிந்து ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கோபி நாத் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனின் தந்தை பழனி என்பவரை கைது செய்தனர். மதுப்போதையில் ஆபாச படத்தை அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பழனியை புழல் சிறையில் அடைத்தனர்.

You may have missed