தறிக்கெட்டு வந்த கார் மோதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கால் முறிந்தது..!

தறிக்கெட்டு வந்த கார் மோதி, இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை, அசோக் நகர் காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் கஜேந்திரன் (56). இவர், நேற்று முன் தினம் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில், கண்காணிப்பு பணியில் இருந்தார்.

ஆறாவது அவின்யூவில் பணியில் இருந்தபோது, அங்கு தறிக்கெட்டு வந்த கார், இவர் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டார். காலில் முறிவு  ஏற்பட்டு பலத்த  காயம் ஆனது.

 அவரை, உடனடியாக, கே.கே.நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அசோக் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் (38) என்பவரை கைது செய்தனர்.