அடுத்தடுத்து லாரிகள் ஏறி இறங்கியதில் கூழ் கூழான பெண்ணின் உடல், சாலையோடு ஒட்டிக் கிடந்தது

சென்னை, காசிமேடு ஜீரோ துறைமுகத்தில், அடுத்தடுத்து லாரிகள் ஏறி இறங்கியதில் விபத்தில் அடிப்பட்ட பெண்ணின் உடல் கூழ் கூழாக சாலையில் ஒட்டிக் கிடந்தது.  இதனால் அந்த பெண் யார் என கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, காசிமேடு ஜீரோ துறைமுகத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். ஆனால் அது தெரியாமல் அடுத்தடுத்து கண்டெய்னர் லாரிகள் அந்த உடலில் ஏறி இறங்கி சென்றதில் கூழ் கூழானது. சாலையோடு உடல் சிதறி ஒட்டிக் கிடந்தது. தலை, உடல், கை, கால் என எதுவுமே இல்லை. பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளது. அங்கிருந்த ஆடைகளை பார்த்த போது அது வயதான பெண்மணியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரத்தில் மழையில் சாலையை கடக்கும் போது ஏதோ கண்டெய்னர் லாரியில் சிக்கியிருக்கலாம், வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருந்ததால் அடுத்தடுத்து சென்ற கண்டெய்னர் லாரிகள் ஏறி இறங்கியதில் உடல் கூழாகி போனது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த பகுதியில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.