ஆந்திர எல்லை அருகே விபத்து, நடுக்கடலில் தீப்பிடித்த படகு, காசிமேடு 9 மீனவர்கள் தப்பினர்

ஆந்திர எல்லை அருகே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பிடித்தது. இதில் காசிமேடு மீனவர்கள் உயிர் தப்பினர்.

தமிழகத்தில், மீன் பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15 வரையில் இருந்தது. மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் இந்த மாதங்களில் தடைக்காலம் இருக்கும். நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க செல்லலாம். மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், மீன் பிடிக்க செல்ல கூடாது. இந்த தடைக்காலம் முடிந்தது. மீன் பிடி தொழிலுக்கு விசைப்படகுகள் செல்ல ஆரம்பித்து விட்டன.

சென்னை காசிமேடு மீன் துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி 9 மீனவர்களுடன் விசைப்படகு ஒன்று சென்றது. ஆந்திர எல்லை அருகே நெல்லூரில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகு தீப்பிடிக்க தொடங்கின. உயிர்காக்கும் உபகரணங்களுடன் 9 மீனவர்களும் கடலில் குதித்தனர். தகவல் கிடைத்து கடலோர காவல் படையின் கப்பல் வந்தனர். மீனவர்களை பத்திரமாக மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகு நடுக்கடலில் எரிந்து சாம்பலாயின. இது தொடர்பாக படகு உரிமையாளர் புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் மாரியப்பன் புகார் கொடுத்துள்ளார்.