87 ஆண்டுகளில் முதல்முறை: பிசிசிஐ அதிர்ச்சி தரும் அறிவிப்பு

87 ஆண்டுகளில் முதல்முறையாக, மாநில அளிகளுக்கு இடையே நடத்தப்படும் உள்நாட்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு விஜய் ஹசாரேக் கோப்பையுடன், 19வயதுக்குட்பட்ட வினு மன்கட் கோப்பைப் போட்டியும், மகளிர் சீனியருக்கான ஒருநாள் போட்டியும் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும்

ஆனால், ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என அனைத்து கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்டஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..ரஞ்சிக்கோப்பைப் போட்டிகள் விளையாடாமல் ஊதியத்தை இழந்த வீரர்களுக்கு உரிய இழப்பீடு தரபப்டும் என பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முஷ்டாக் அலி கோப்பைக்கு என்ன மாதிரியான பயோ-பபுள் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதோ அதை விதிமுறைகள் அடுத்தமாதம் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கும் கடைபிடிக்கப்படும்.

சயத் முஷ்டாக் அலி கோப்பையை வெற்றிகரமாக நடத்திய அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுவீச்சில்  வேகமாகத் தயாராகி வருகிறோம்என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.