கேஸ் அடுப்பா அப்படினா என்ன ? மண் அடுப்பும், மண் குடிசை போதும்,சிவகங்கை மக்களின் பழங்கால வாழ்க்கை

கேஸ் அடுப்பு என்றால் என்ன? எங்களுக்கு, மண் அடுப்பும், மண் குடிசையே போதும் என சிவகங்கை மக்கள் பழங்கால வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

சிவகங்கை , மேலச்சாலூரில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் விவசயிகள் ஆவர். பெருமளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டு இங்கிருந்து அனுப்பபடுகின்றன. இங்கு இன்னும் மக்கள் மண் குடிசை வீடுகளில் தான் வசித்து வருகின்றனர். கடந்த 2006 கணக்கின் படி இங்கு 400 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்தனர். தற்போது 25 குடும்பங்கள் மட்டும் தான் குடிசை வீடுகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்கள் கான்கிரீட் வீடுகளுக்கு மாறிவிட்டனர்.

மேலும் குடிசை வீடுகளில் வாழ்பவர்கள் மண் அடுப்பில் தான் சோறு சமைக்கின்றனர். ஆட்டுக்கல், அம்மிக்கல் போதும் என்கிறார்கள். அதற்கும் ஒரு காரணத்தை இந்த் ஊர் மக்கள் சொல்கின்றனர், இங்குள்ள அம்மன்கள் குடிசைகளில் தான் உள்ளன. இந்த கிராமத்தில் பொன்னழகியம்மன், பச்ச நாச்சி, சருவுடை நாச்சி அம்மன் ஆகியவை இன்றும் குடிசை கோபுரங்களில் தான் உள்ளனவாம். அம்மன்களே குடிசைகளில் இருக்கும் போது நாங்கள் இருந்தால் என்ன என கேட்கின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் நேரத்தில் கேஸ் அடுப்புன்னா என்ன கேட்கின்றனர்.