திருடுப்போன 51 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், திருடுப்போன 51 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்தில் பயணம் செய்யும் போது தவறவிட்ட, திருட்டுக் கொடுத்த, வாகனத்தில் செல்லும் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள், அதை பறிக்கொடுத்தவர்கள், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் புகார் கொடுத்தனர். ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் மூலம் ஆவடி, மீஞ்சூர், கடலூர், திண்டிவனம், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் தெரியாமல் திருட்டு செல்போன்களை வாங்கி உபயோகப் படுத்தியவர்களிடம் போலீசார் நிலைமையை விளக்கி கூறினர். பின்னர் அவர்களிடம் 51 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.