ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை: கூட்டு பலாத்காரத்தில் கொடூரம்

தஞ்சையில், ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அம்மா பேட்டையை சேர்ந்த சிவலிங்கம். இவரின் சரோஜா, இவர்களின் இரண்டாவது மகள் கனகவள்ளி (33), இவர் ஆடு மேய்க்க சென்று, வீடு திரும்பவில்லை, மறு நாள் காலையில் பொட்டங்காடு பகுதியில் கனகவள்ளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் கிடைத்து, அம்மா பேட்டை போலீசார், விரைந்து சென்று, கனகவள்ளி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், பெரியசாமி ஆகியோர், தனியாக இருந்த கனகவள்ளியை தூக்கி சென்று, கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.