தஞ்சையில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..! 4பேர் உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று அதிகாலையில், சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக பலியானார். 4பேர் உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், புதுப்பட்டி, சின்ன முத்தாண்டி பட்டியை சேர்ந்தவர் யூசுப், இவரின் மகன் சலீம் (45). இவரின் மனைவி ஷகிலா பானு (40).

இவர்களுக்கு, 6ம் வகுப்பு படிக்கும் ரிஸ்வானா (14), ஒன்றாம் வகுப்பு படிக்கும் அசாரூதீன் (5) ஆவர். இந்த நிலையில் நேற்று இரவு யூசுப் குடும்பத்துடன் படுத்து தூங்கினார்.

தொடர்ந்து பெய்த கனமழையால், இவர்களின் வீடு ஈரத்தில் சேதமடைந்து இருந்தது. இன்று அதிகாலையில், பயங்கர சத்தம் கேட்டது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருந்தது.

அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த அனைவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே சிறுவன் அசாரூதின் இறந்தார். மற்றவர்களு சிகிச்சையில் உள்ளனர். பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.